2019ல் அடியெடுத்து வைக்கும் மேஷ ராசி நேயர்களே, இந்த வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 8-ம் வீட்டிலும், சனி பகவான் 9-ம் வீட்டிலும் இருப்பதால் பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். முக்கிய காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பின் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த வருடம், நல்லதும், கெட்டதும் கலந்தே நடக்கும். மனதில் தோன்றும் பல எண்ணங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும். எப்போதும் அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கவும். பணம் பல வழிகளில் வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புது மன தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் செய்ய தொடங்கவும். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும், தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. பெற்றோர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளவும். உடன் பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். உடன்பிறப்பு வகையில் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சுப செலவுகள் அதிகளவில் ஏற்படும். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள புது வழியை தேடிக்கொள்ளவும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். சொந்தவீடு கனவு சீக்கிரத்தில் நனவாகும். நிலுவையில் இருந்து வரும் சொத்துப்பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உறவினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும். பெற்றோரின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இக்கட்டான சூழலில் பெண்களால் ஆதாயம் பெற முடியும். உத்யோகத்தில் பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். உத்யோகத்தில் உங்கள் ஆலோசனைக்கு நல்ல வரவேற்பு இருக்கும். தொழில், வியபாரத்தில் படிப்படியாக முன்னேற்றம் வரும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீட்டை தவிர்க்கவும். இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா வகையிலும் நற்பலன்கள் அள்ளித்தரும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் செவ்வாய்கிழமையில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட உங்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2019ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831